Paristamil Navigation Paristamil advert login

உங்களுக்கே தெரியாமல் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்… இனிமேலாவது உஷாராக இருங்கள்..!

உங்களுக்கே தெரியாமல் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்… இனிமேலாவது உஷாராக இருங்கள்..!

31 மார்கழி 2021 வெள்ளி 11:58 | பார்வைகள் : 8526


 மிகவும் ஆரோக்கியமானது என்று நாம் நினைத்து சாப்பிடும் உணவுகள் நமது உடல் எடையை அதிகரிக்கிறது. உணவு நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அடிக்கடி மக்களுக்கு என்ன சாப்பிட வேண்டும், எந்த உணவை தவிர்க்க வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என அட்வைஸ் செய்கிறார்கள்.

 
ஆனால் உடல் எடையை குறைக்க நினைக்கும் பெரும்பாலானோர் அதனை பின்பற்றுவதில்லை. ஆரோக்கியமான உணவுகள் என நினைத்து நாம் சாப்பிடும் உணவுகள் சில சமயங்களில், கலோரிகள் நிறைந்தவையாக இருக்கிறது. எனவே கவனத்துடன் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக பால் மற்றும் தேன் போன்றவை ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் நமது உடல் எடையை கணிசகமாக அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
 
 
சில நேரங்களில் ஆரோக்கியமான உணவுகள் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்பதை நாம் உணர தவறுகிறோம். இதுகுறித்து மேலும் அறிய, டைம்ஸ் நவ் டிஜிட்டல் டயட்டீஷியன் ரஜத் ஜெயின் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
ஆரோக்கியமான உணவுகள் என நினைத்து நாம் சாப்பிடுபவை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் பேசினார். அப்போது உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் குறித்து விளக்கினார்.
 
முதல் விஷயம் உலர்ந்த பழங்கள் :
 
வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளதால் நட்ஸ் வகைகளை அதிகம் சாப்பிடலாம் என்று நினைக்கிறோம், ஆனால் உலர் பழங்களில் இனிப்பு சத்து மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளது. இதனால் நமக்கு தெரியாமலேயே ஏராளமான கலோரிகளை உட்கொள்கிறோம்.
 
எனவே, அனைத்து உலர் பழங்களும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் நிறைந்திருப்பதால் அளவாக உட்கொள்ள வேண்டும். பாதாம், அக்ரூட் பருப்புகள் பல்வேறு வகையான நட்ஸ்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு ஒரு பெரிய காரணம் என ரஜத் ஜெயின் தெரிவிக்கிறார்.
 
டயட் உணவுகள் :
 
கொழுப்பு இல்லாத சிப்ஸ் போன்ற பேக்கேஜ் செய்யப்பட்ட டயட் உணவுகள் ஆரோக்கியமானவை அல்ல. உண்மையில், அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவற்றில் செயற்கை இனிப்புகள் மற்றும் மசாலாப் பொருட்கள் நிறைந்துள்ளது. இதில் அதிகளவிலான கலோரிகள் இருப்பதால் இந்த உணவுகள் எடையை அதிகரிக்கும்.
 
 
 
வேர்க்கடலை வெண்ணெய்:
 
வேர்க்கடலை வெண்ணெய்யை அதிகளவு எடுத்து கொள்ளும் போது உடல் எடையானது அதிகரிக்கும். எனவே தினசரி உங்கள் தேவையின் அடிப்படையில் மட்டுமே அதை உட்கொள்ள வேண்டும், அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
 
காபி:
 
காபியில் காஃபின் உள்ளது. இது உங்கள் எடையைக் குறைக்கவும், நீண்ட காலத்திற்கு பசியை அடக்கவும் உதவுகிறது. ஆனால், நீங்கள் சுவையூட்டப்பட்ட காபிக்காக, பால், சர்க்கரை, கிரீம், கேரமல் மற்றும் பிற பொருட்களை சேர்த்து அருந்தினால் உடல் எடையை அதிகரிக்கும் என அவர் விளக்கியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்