நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் இவ்வளவு ஆபத்து இருக்கா..?
21 கார்த்திகை 2022 திங்கள் 16:35 | பார்வைகள் : 14164
ஷாம்புவில் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இதை தெரிஞ்சுக்கிட்டு பயன்படுத்துங்க..!
முடி பராமரிப்பு மற்றும் அழகு சாதனங்களில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுவது சாதாரணம். இதுபோன்ற ஆல்கஹால் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால், முடி விரைவாக வறண்டு போகும். அத்துடன் பலவீனமடைதல் , அரிப்பு , பொடுகு , முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் வரும்.
தலை முடி கொட்டுகிறது என்றாலே என்ன காரணம் என்று தெரிந்துகொள்ளாமலே புலம்பிக்கொண்டிருப்பார்கள். அதிகப்படியான முடி உதிர்வு சிலருக்கு மன அழுத்தத்தையே உண்டாக்கும். இந்த பிரச்னைக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ கூட காரணமாக இருக்கலாம். ஆம், அதில் கலக்கப்படும் இரசாயனக் கலவைகள் முடி உதிர்தலுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.
ஃபார்மால்டிஹைட்: இது ஒரு வேதிப்பொருள். இது பல அழகு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருளின் காரணமாக, புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா ஏற்படும் அபாயம் உள்ளது.
ஷாம்புகளிலும் சல்ஃபேட் பயன்படுத்தப்படுகிறது. சல்பேட் உச்சந்தலை மற்றும் இயற்கையாக தலையில் சுரக்கும் எண்ணெய்யை தடுக்கிறது. சோடியம் லாரைல் சல்ஃபேட் மற்றும் சோடியம் லாரெத் சல்பேட் பொதுவாக ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. முடி உடைதல் மற்றும் உதிர்தல் பிரச்னைக்கு இதுவும் ஒரு காரணம்.
ஆல்கஹால்: முடி பராமரிப்பு மற்றும் அழகு சாதனங்களில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுவது சாதாரணம். எத்தனால், எஸ்டி ஆல்கஹால் 40, புரோபில், ஐசோபிரைல், புரோபனோல் ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் ஆகும். இதுபோன்ற ஆல்கஹால் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால், முடி விரைவாக வறண்டு போகும். அத்துடன் பலவீனமடைதல் , அரிப்பு , பொடுகு , முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் வரும்.
பேராபென் (Paraben): அழகு சாதன பொருட்கள் விரைவில் காலவதியாகாமல் இருக்க பயன்படுத்தப்படுகிறது. பியூட்டில் பேராபென், புரோபில் பேராபென் மற்றும் மெத்தில் பேராபென் ஆகியவை அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பேராபன்கள். அவை தோல் வழியாக உடலில் நுழைந்து ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களை பாதிக்கின்றன. சில பேராபென்கள் புற்றுநோய் உள்ளிட்ட பிற கடுமையான நோய்களை ஏற்படுத்துகின்றன.
வாசனை திரவியம்: பெரும்பாலான தயாரிப்புகளில் வாசனையை அதிகரிக்க தாலேட் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சியின் படி, தாலேட் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது இனப்பெருக்க அமைப்புகளையும் பாதிக்கிறது. பொருட்களின் வாசனையை அதிகரிக்க இந்த ரசாயனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், தோல் மற்றும் சுவாசத்தின் மூலம் உடலுக்குள் நுழைய முடியும்.
எனவே ஷாம்புகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் விளைவுகளைத் தவிர்க்க ஷாம்பூக்களை குறைவாகவே பயன்படுத்த வேண்டும். ஷாம்பூவை நேரடியாக அப்படியே தலையில் அப்ளை செய்யாமல் தண்ணீரில் கலந்து அப்ளை செய்யுங்கள். முடிந்தால் இயற்கை ஷாம்பூக்களைப் பயன்படுத்துங்கள்.