மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களோடு உரையாடிய மக்ரோன்!
22 ஆனி 2025 ஞாயிறு 19:09 | பார்வைகள் : 3386
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இன்று ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை காலை மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களோடு தொலைபேசி வழியாக உரையாடியுள்ளார்.
சவுதி அரேபியாவின் இளவரசர் Mohammed bin Salman Al Saud, ஓமன் சுல்தான் Qaboos bin Said Al Said , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி Sheikh Mohammed bin Zayed Al Nahyan மற்றும் கத்தார் இளவரசர் Tamim bin Hamad Al Thani ஆகியோருடன் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளார்.
ஈரானுடனான போரில் அமெரிக்கா இணைந்துள்ளதை அடுத்து அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாகவும், ஈரானுக்கு ஆதரவாக ஏனைய நாடுகள் இணையக்கூடாது என்பதை வலியுறுத்தவும் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில்...
"நான் ஈரான் அதிபரிடம் (Masoud Pezeshkian) திரும்பி எங்கள் கோரிக்கையை தெளிவுபடுத்தினேன்: எங்கள் குடிமக்களான செசிலி கோலியர் மற்றும் ஜாக் பெர்ரியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நேற்றிரவு நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த ஆபத்தான சூழலில், இராஜதந்திரப் பாதைக்குத் திரும்புவதற்கு ஈரானின் தரப்பில் அமைதியாகவும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுத்தேன்.
உரையாடல், அணு ஆயுதங்களை கைவிட ஈரானின் தெளிவான அர்ப்பணிப்பு - அல்லது முழு பிராந்தியத்திற்கும் மோசமான சூழ்நிலை ஏற்படும் அபாயம். இதுவே அனைவருக்கும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான ஒரே வழி" என மக்ரோன் குறிப்பிட்டார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan