Paristamil Navigation Paristamil advert login

நோர்வே பயணமாகிறார் மக்ரோன்!

நோர்வே பயணமாகிறார் மக்ரோன்!

23 ஆனி 2025 திங்கள் 10:02 | பார்வைகள் : 1930


 

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக  ஜூன் 23, இன்று திங்கட்கிழமை நோர்வே பயணமாகிறார்.

தற்போது உலக நாடுகளால் போட்டி போட்டு இடம்பிடிக்கும் 'வட துருவம்' பகுதி தொடர்பில் நோர்வே அரசுட கலந்துரையாட இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக உருகி வரும் ஆர்டிக்ட் பகுதியில் புதிய வணிக பாதையை திறப்பது தொடர்பில் உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில், பிரான்சும் இந்த போட்டியில் பங்கேற்று பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிறது. ஆறு புதிய போர்க்கப்பல்களை பிரான்ஸ் ஆர்டிக்ட் பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பகுதியை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு பல மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இன்றும் நாளையும் ஜனாதிபதி மக்ரோன் கலந்துரையாட உள்ளார். அத்தோடு நாளை மாலை அங்கிருந்து நெதர்லாந்து செல்ல உள்ளார். அங்கு இடம்பெறும் NATO மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்