அருண்குமாரின் அடுத்த படத்தில் உலக நாயகன்?

23 ஆனி 2025 திங்கள் 16:36 | பார்வைகள் : 1355
தமிழ் திரையுலகின் வெற்றி பெற்ற இயக்குநர்களில் ஒருவரான அருண்குமாரின் அடுத்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்குமார், அதன்பிறகு விஜய் சேதுபதி நடித்த 'சேதுபதி', 'சிந்துபாத்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் சித்தார்த் நடித்த 'சித்தா' என்ற படத்தையும் இயக்கினார். அதன் பின்னர் விக்ரம் நடித்த 'வீரதீர சூரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய அவர், தற்போது அந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இந்த படத்தை முடித்தவுடன் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை அருண்குமார் இயக்க இருப்பதாகவும், அவர் கூறிய கதை கமல்ஹாசனுக்கு பிடித்துவிட்டது என்றும், கமல்ஹாசன் இந்த படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. திரைக்கதை அமைக்கும் பணியை தற்போது அருண்குமார் கவனித்து வருவதாகவும், விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தற்போது அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வரும் நிலையில், இதை முடித்தவுடன் அவர் 'இந்தியன் 3' மற்றும் ' கல்கி 2898ஏடி' படத்தின் 2ஆம் பாகம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025