Paristamil Navigation Paristamil advert login

கத்தாரில் உள்ள அமெரிக்கர்களிற்கு தூதரகம் அவசர அறிவிப்பு

கத்தாரில் உள்ள அமெரிக்கர்களிற்கு தூதரகம் அவசர அறிவிப்பு

23 ஆனி 2025 திங்கள் 20:06 | பார்வைகள் : 3136


இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்துள்ள கத்தாரில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான

 இடங்களிற்கு செல்லுமாறு அந்த நாட்டிற்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

மிகுந்த எச்சரிக்கையின் காரணமாக இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் தூதரகம் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.

கத்தாரில் உள்ள தனது குடிமக்கள் மிகவும் அதிகக் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு சூழ்நிலை மோசமாகும் அபாயம் இருந்தாலும், தற்போது வரை கனடா அரசால் வீடுகளில் தங்கியிருக்குமாறு “Shelter-in-place” உத்தரவு வழங்கப்படவில்லை.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்