பிரான்சில் பெரும் நிலப்பரப்பை வாங்கும் கூகுள் நிறுவனம்!!

24 ஆனி 2025 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 2378
அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் பிரான்சில் மிகப்பெரிய நிலப்பரப்பை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
பிரான்சின் மத்திய மாவட்டமான Châteauroux இல் இந்த நிலப்பரப்பினை கொள்வனவு உள்ளது. ஆனால் அதனை அப்பகுதி நகரசபை வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்கும் எனவும், இதற்கான வாக்கெடுப்பு இன்று ஜூன் 24, செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 58.5 மில்லியன் யூரோக்கள் செலவில் 195 ஹெக்டேயர் நிலத்தை கூகுள் நிறுவனம் கோரியுள்ளது. அதில் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய தகவல் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவ உள்ளது.