இஸ்ரேலில் இருந்து வெளியேறும் 17 இலங்கையர்கள்
24 ஆனி 2025 செவ்வாய் 09:44 | பார்வைகள் : 1316
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் மோதலுக்கு மத்தியில் இஸ்ரேலில் சிக்கியுள்ள 17 இலங்கை பிரஜைகள் இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் விசேட விமானத்தில் நாடு திரும்பவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையர்கள் நாளை புதன்கிழமை (25) ஜோர்தானில் உள்ள அம்மன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் தலைநகர் புது டில்லிக்கு புறப்படவுள்ளனர்.
அத்துடன், எதிர் வரும் நாட்களில் எகிப்து ஊடாக இலங்கைக்கு வருகை தர 20 பேர் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தூதுவர் பண்டாரா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலில் இருந்த 5 பேர் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வருகை தந்த 219 பேர் இஸ்ரேலுக்கு திரும்பிச் செல்லவுள்ளனர்.
அதன்படி, தற்போது அவர்களின் வீசாக்கள் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன், பயணிகள் எந்தத்தடையும் இன்றி இஸ்ரேலுக்குப் பயணிக்க முடியும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan