ஏன் உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்கள் இன்று பரிஸ் மேலாக பறக்கவிருக்கின்றன?

24 ஆனி 2025 செவ்வாய் 14:59 | பார்வைகள் : 3576
ஜூன் 24, செவ்வாய்க்கிழமை மதியம் முதல், பல உலங்குவானூர்திகளும் விமானங்களும் பரிஸ் நகரத்தின் மேலாக பலமுறை பறக்கவிருக்கின்றன. இது
ஜூலை 14 தேசிய தினத்துக்கான பயிற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த விமானப் பயணங்கள், Issy-les-Moulineaux (Hauts-de-Seine) மற்றும் Bois de Vincennes இடையே நடைபெறும்.
பிரான்சின் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் படைவிழா (défilé militaire)க்கான முன்பயிற்சிகளே இவை.
இது ஒரு பாதுகாப்பு பயிற்சியாகும். சத்தம், பாதுகாப்பு நடமாட்டம் ஆகியவை இயல்பானவையாக இருக்கும். பதற வேண்டியதில்லை.
மதியம் 1:30 மணி முதல் 5:30 மணி வரை
4 உலங்குவானூர்திகன் பறக்கவிருக்கின்றன:
Issy-les-Moulineaux aerodrome
La Défense
Champs-Élysées
Place de la Concorde
Porte Dorée
Bois de Vincennes
ஆகிய இடங்களிற்கு மேலாக இவை பறக்க உள்ளன.
அடுத்த பயிற்சியானது ஜூலை 9 நடைபெறும். அன்று:
70 விமானங்கள் பங்கேற்கும் பயிற்சி
மதியம் 2:30 முதல் 4:30 வரை - மழை பெய்தால் இந்தப் பயிற்சியாது 10 அல்லது 12 ஜூலைக்கு மாற்றம் செய்யப்படும்.
ஜூலை 14 தேசிய தினத்திற்குப் பறக்கும் விமானிகள் தயாராகின்றனர். 102 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், காலை 10 மணி முதல் பாரிஸ் நகரின் மேலாக பறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025