Paristamil Navigation Paristamil advert login

நம் விமானப்படைக்கு மேலும் 6 தேஜஸ் விமானம்

நம் விமானப்படைக்கு மேலும் 6 தேஜஸ் விமானம்

25 ஆனி 2025 புதன் 09:37 | பார்வைகள் : 1041


அடுத்தாண்டு மார்ச்சுக்குள் இந்திய விமானப்படைக்கு ஆறு தேஜஸ் இலகுரக போர் விமானங்கள் வழங்கப்படும்,'' என, எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டி.கே.சுனில் தெரிவித்தார்.

கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த, எச்.ஏ.எல்., நிறுவனம் நம் விமானப்படைக்கு தேவையான தேஜஸ் போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது.

தேஜஸ் விமானங்களின் இன்ஜின்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுகின்றன.

இந்நிறுவனம் இன்ஜின்களை உரிய நேரத்தில் டெலிவரி செய்யாததால், தேஜஸ் விமான தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டது.

எச்.ஏ.எல்., நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டி.கே.சுனில் நேற்று கூறுகையில், ''நடப்பு நிதியாண்டில், 12 இன்ஜின்களை ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனம் வழங்கும் என, எதிர்பார்க்கிறோம். தற்போதைய நிலவரப்படி, இன்ஜினுக்காக ஆறு தேஜஸ் விமானங்கள் காத்திருக்கின்றன.

''இன்ஜின்கள் வந்ததும் ஆறு விமானங்களையும், 2026 மார்ச்சுக்குள் நம் விமானப்படையிடம் ஒப்படைத்து விடுவோம்,'' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்