இஸ்ரேலிய தாக்குதல்களில் 606 ஈரானியர்கள் பலி

25 ஆனி 2025 புதன் 14:14 | பார்வைகள் : 2075
கடந்த 12 நாட்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட, இஸ்ரேலிய தாக்குதல்களில் 606 ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
5,332 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரானின் சுகாதார அமைச்சர் முகமது ரேசா ஜஃபர்காண்டி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 13 திகதியன்று வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பித்ததிலிருந்து இஸ்ரேலின் "மிகக் கொடூரமான தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை" கடந்த 24 மணிநேரத்தில் தாம் கண்டதாக அவர் விபரித்துள்ளார்.
இதன் விளைவாகக் கடந்த 24 மணித்தியாலங்களில் 104 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1,342 பேர் காயமடைந்ததாக ஈரானின் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மோதல் ஆரம்பித்ததிலிருந்து தமது நாட்டில் 28 பேர் உயிரிழந்ததாகவும், 3,238 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.