15,16 வயது இளம்பெண்களைக் காணவில்லை - உதவிகோரும் ஜோந்தார்மினர்!
25 ஆனி 2025 புதன் 16:28 | பார்வைகள் : 2422
கல்வாதோ (Cavados) பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய Shana, Eloïne, என்ற இரண்டு இளம் பெண்கள் ஜூன் 17ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் பரிஸ் பகுதியை நோக்கி தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒன்றை ஜோந்தார்மினர் வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போன நேரத்தில்
எலோயின் ஒரு Under Armour மேலாடையும் , கருப்பு உடைகளும் ஒரு சூட்கேஸ் மற்றும் கருப்பு கைப்பை உடன் இருந்தார்.
ஷானா ஒரு கருப்பு மேலாடை, சாம்பல் நிற Adidas ஜோக்கிங் மற்றும் வெள்ளை நிற New Balance சப்பாத்தும் அணிந்திருந்தார்.
இவர்கள் கோன் (CAEN) நகரத்தில் இருந்து பரிஸ் பகுதியை நோக்கி தொடருந்தில் பயணித்திருக்கலாம் என ஜோந்தார்மினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால்,
Troarn ஜோந்தார்ம் நிலையத்துக்கு 02.31.15.07.28 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது
17 என்ற அவசர எண்னை அழைக்கலாம்.
இது ஒரு முக்கியமான காணாமல் போனமை தொடர்பான அறிவிப்பு என்பதால், உதவ இயன்றால் தயங்காமல் தகவல்களை பகிரவும்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan