Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில் மீண்டும் தாக்குதலை நடத்திய ரஷ்யா

உக்ரைனில் மீண்டும் தாக்குதலை நடத்திய ரஷ்யா

25 ஆனி 2025 புதன் 17:44 | பார்வைகள் : 2102


உக்ரைனில், ரஷ்ய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல், ரஷ்யத் தாக்குதலில் டினிப்ரோவில் (Dnipro) 7 பேரும், சமரில் (Samar) 2 பேரும் கொல்லப்பட்டனர்.

மேலும், வடகிழக்கு உக்ரைனின் சுமி (Sumy) பகுதியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில், 5 வயதுக் குழந்தை உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, உக்ரைனிலிருந்து வந்த, 20 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷ்ய விண்வெளி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்