Paristamil Navigation Paristamil advert login

கூலி படத்திலிருந்து வெளியானது முதல்பாடல்....

கூலி படத்திலிருந்து வெளியானது முதல்பாடல்....

25 ஆனி 2025 புதன் 16:55 | பார்வைகள் : 1176


ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் இருந்து முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பாடல் குறித்த கிளிம்ப்ஸ் காட்சிகள் முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ், சோபின் சாகிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால், கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

இந்த திரைப்படம் லோகேஷ் எல்.சி.யூ. படங்களில் இடம் பெறுமா என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இது ஸ்டாண்ட் அலோன் எனப்படும் தனி திரைப்படமாக வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் கூலி படத்தில் இருந்து முதல் பாடலாக சிக்குடு என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலை அனிருத்துடன் இணைந்து டி. ராஜேந்திரன் பாடியுள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள பாடலில் அனிருத்துடன் இணைந்து டி. ராஜேந்திரன் உற்சாகமாக நடனமாடியுள்ளார். ஏற்கனவே இந்த பாடலின் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தன. இதனால் தற்போது கூலி படத்தின் முதல் பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்