உணவுப்பணக் காசோலைகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயன்படுத்த முடியுமா?

25 ஆனி 2025 புதன் 21:18 | பார்வைகள் : 1596
வணிக அமைச்சரான வெரோனிக் லுவாஜி (Véronique Louwagie) 2027 ஜனவரி 1 முதல், ஊழியர்களுக்குத் தங்களின் உணவுப்பணச் காசோலைகளை (titres-restaurant) ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயன்படுத்த அனுமதிக்க திட்டமிட்டுள்ளார். எனினும், இவை விசேட விடுமுறை நாட்களில் (jours fériés) செல்லாது எனவும் தெரிவித்துள்ளார்.
வெரோனிக் லுவாஜி, 5.5 மில்லியன் தொழிளாளர்களிற்குப் பயனளிக்கும் வகையில், ஞாயிறுகளில் உணவுப்பணக் காசோலைகள் பயன்படுத்த அனுமதிக்கவேண்டிய அவசியம் உள்ளதாக கூறினார்.
இந்த புதிய சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் முன்மொழியப்படும். மற்றும் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறையில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுப்பணக் காசோலைகள் அதிகபட்ச மதிப்பு தற்போது போலவே €25 ஆகவே தொடரும்.
இத்திட்டம் காகித உணவுச் சீட்டுகளை முற்றாக முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த முக்கியமான முன்னேற்றமாகும். 2027 பிப்ரவரி 28 முதல், இலத்தி;ரனியல் மற்றும் வங்கி அட்டை போன்ற வடிவத்தில் மட்டுமே உணவுப்பணக் காசோலைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது மக்கள் உடனடியாகப் பயன்படுத்தத் தூண்டும் நோக்கத்துடன். ஒரு ஆண்டுக்கு மேல் இந்த காசோலைகளின் செல்லுபடிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உணவகங்கள் மற்றும் வணிகர்கள், இந்த திட்டத்தை விமர்சித்து வருகின்றனர். முக்கிய தொழில் அமைப்பான ருஅih இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளில் €1 பில்லியன் இழப்பு ஏற்ப
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1