Paristamil Navigation Paristamil advert login

நேட்டோ நாடுகள் சமாளிக்கவேண்டிய இரண்டு பிரச்சனைகள் - பட்டியலிட்ட ஜனாதிபதி மக்ரோன்!!

நேட்டோ நாடுகள் சமாளிக்கவேண்டிய இரண்டு பிரச்சனைகள் -  பட்டியலிட்ட ஜனாதிபதி மக்ரோன்!!

25 ஆனி 2025 புதன் 21:55 | பார்வைகள் : 2046


 

இன்று இடம்பெற்ற NATO நாடுகளுக்கான மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன், யுக்ரேனின் செலன்ஸ்கி என பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதன்போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சில தகவல்களை வெளியிட்டார். அதன்போது NATO’வுக்கு இரண்டு புதிய எதிரிகளை சமாளிக்க வேண்டியதாக உள்ளதாக தெரிவித்தார். அதில் ஒன்று ‘ரஷ்யா ஆக்கிரமிப்பு’ எனவும், இரண்டாவது ’அமெரிக்கா விதிக்கும் அதிக வரி’ எனவும் அவர் தெரிவித்தார்.

சில நாட்களாக ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் ஆங்கிலக்கால்வாயில் வலம் வருவது காணக்கூடியதாக உள்ளது. பிரித்தானியா நவீன போர் விமானங்களை வாங்க உள்ளது. ‘போர் ஒன்றுக்கு தயாராகுங்கள்’ எனவும் பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்திருந்தார். ரஷ்யா ஐரோப்பாவின் புதிய பொது எதிரியாக மாறி வருவதாகவும், யுக்ரேனை தாண்டியும் ஆக்கிரமிப்பு தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்