குழந்தை அதிக நேரம் தூங்கிக்கொண்டே இருந்தால் ஆபத்து?
29 புரட்டாசி 2022 வியாழன் 06:26 | பார்வைகள் : 3547
உங்கள் குழந்தை அதிகமாக தூங்கினால், எதையோ நினைத்து வருத்தப்படலாம் அல்லது உடல் நிலையில் பாதிப்பு இருக்கலாம் . உண்மையில், அதிகமாக தூங்குவதும் குறைவாக தூங்குவதும் குழந்தைக்கு பாதுகாப்பற்றவை. அதற்காக குழந்தைகள் எப்போதும் தூங்கவே கூடாது என்பதும் அர்த்தமில்லை. ஓடி ஆடி விளையாடும் குழந்தைக்கு களைப்பில் எப்போது வேண்டுமானாலும் தூக்கம் வரலாம்.
எனவே தூங்கினாலும் ஆபத்து என்று அர்த்தமில்லை. குழந்தை சாதாரண நேரத்தை விட ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் அதிகமாக தூங்கினால் பரவாயில்லை. ஆனால் அதற்கும் மேலாக பகலில் தூங்கிக்கொண்டே இருந்தால் அது பிரச்சனையாக இருக்கலாம்.
அதுவும் வழக்கத்திற்கு மாறாக அவர்கள் நீண்ட நேரம் தூங்கிக்கொண்டே இருந்தால் அதை கவனிக்காமல் விடுவதும் ஆபத்து. எனவே அவர்களின் தூக்க நிலையில் மாற்றங்களை கண்டால் கவனம் செலுத்துவது அவசியம்.
ஹெல்த் லைனின் கூற்றுப்படி, முதலில் குழந்தைக்கு எந்த மருத்துவப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின் குழந்தைக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டறியுங்கள்.
பின் பகலில் அவர்கள் தூங்கும் நேரத்தை அட்டவனைப்படுத்துங்கள். எவ்வளவு நேரம் தூங்கிறார்கள், எப்போது தூங்குகிறார்கள், எதனால் தூங்குகிறார்கள் என கண்டறியுங்கள். அவ்வாறு கண்டறியும்போது தூங்குவதற்கே அதிக நேரம் செலவழிக்கிறார்கள் எனில் அவர்களை மடைமாற்றம் செய்ய அவர்களுடன் விளையாடுங்கள். பிடித்த விளையாட்டுப் பொருட்களை கொடுங்கள். அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாட வையுங்கள். இதனால் அவர்கள் தூக்கத்தை மறந்து உற்சாகமாக விளையாட செய்வார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய அவர்களின் தூக்க நேரத்தை தவிர்த்துவிடுவார்கள். பின் உங்கள் அட்டவனைப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களை தூங்க வையுங்கள்.
இது தவிர, குழந்தையின் எடையிலும் கவனம் செலுத்துங்கள். குழந்தை அதிக எடை கொண்டவராக இருந்தாலும், அதிக தூக்கம் மற்றும் சோம்பல் ஏற்படலாம்.
சில நேரங்களில் குழந்தைகள் சோம்பல் காரணமாக எழுந்த பிறகும் எழுந்திருக்க மாட்டார்கள். எனவே, அவர்களை அதிகாலையில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வையுங்கள்.