12 வயது சிறுவன் பலி! - இரண்டாக உயர்வடைந்த மரணங்கள்!!

26 ஆனி 2025 வியாழன் 06:31 | பார்வைகள் : 2219
நேற்று ஜூன் 25, புதன்கிழமை நாட்டின் பல பகுதிகளை புயல் சூறையாடியிருந்தது. இடி மின்னல் தாக்குதல்களுடன், மரங்கள் முறிந்து விழுந்து பலத்த சேதங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
12 வயது சிறுவன் பலி!
நேற்று மாலை 9 மணி அளவில் தெற்கு பிரான்சின் Tarn-et-Garonne நகரில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சிறுவன் பலியாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
59 வயது நபர் பலி!
பிரான்சின் வடமேற்கு பகுதியான Mayenne மாவட்டத்தின் Saint-Cyr-en-Pail நகரில் 59 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். மரம் ஒன்று முறிந்து விழுந்து, படுகாயமடைந்து பலியாகியுள்ளார். அங்கு 140 கி.மீ வேகத்தில் புயல் வீசியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1