5 லட்சம் பெறுமதியான மின்னணு சாதனங்கள் கொள்ளை: மரத்தை போட்டு வழிமறித்து கொள்ளையர்கள் தப்பியோட்டம்!!
26 ஆனி 2025 வியாழன் 17:17 | பார்வைகள் : 1821
கம்பான் (Compans-Seine-et-Marne) பகுதியில் உள்ள களஞ்சியத்தில் சனிக்கிழமை இரவு 2 மணியளவில் 6 முதல் 8 பேர் கொண்ட கொள்ளையர்கள் குழு நுழைந்து, தொலைபேசிகள், கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அடங்கிய பெட்டிகளை திருடி சென்றுள்ளனர்.
அவர்கள் ஒரு 4x4 வாகனமும், வெள்ளை வானும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இழப்பு சுமார் 5 லட்சம் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் துரத்தலை தவிர்க்க, வெட்டிய மரத்தை வீசி சாலையை முடக்கி, கொள்ளையர்கள் வயல்வெளி ஊடாக தப்பியோடியுள்ளனர்.
இந்த வழக்கு SCOS (Meaux) எனும் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதே இடத்தில் பத்து நாட்களுக்கு முன் மற்றொரு கொள்ளை முயற்சியும் நடந்தமை குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan