இறைச்சி உணவுப்பொருட்களில் நோய்க்கிருமி -பிரித்தானியா சுகாதாரம் அறிவிப்பு

26 ஆனி 2025 வியாழன் 18:19 | பார்வைகள் : 877
பிரித்தானியாவில், இறைச்சி, முட்டை, பச்சைக்காய்கறிகள், பதப்படுத்தாத பால் போன்ற உணவுப்பொருட்கள் மூலம் நோய்க்கிருமிகள் பரவுதல் உச்சம் தொட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
சால்மோனெல்லா மற்றும் கேம்பைலோபாக்டர் ஆகிய நோய்க்கிருமிகள், இறைச்சி, முட்டை, பச்சைக்காய்கறிகள், பதப்படுத்தாத பால் போன்ற உணவுப்பொருட்கள் மூலம் பரவுகின்றன.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, 2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2024ஆம் ஆண்டில் சால்மோனெல்லா கிருமித் தொற்று 17.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதாவது, நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை, 8,872இலிருந்து 10,388 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, கேம்பைலோபாக்டர் என்னும் கிருமித் தொற்றும் 17.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதாவது, நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டில் 60,055 ஆக இருந்தது, 2024இல் 70,352 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கிருமிகளைப் பொருத்தவரை, அவை கெட்டுப்போன உணவு மற்றும் பதப்படுத்தப்படாத பால், பச்சைக்காய்கறிகள் போன்றவற்றை உண்ணுவதால் மட்டுமல்ல, சமையலறையில் இறைச்சியைக் கழுவும்போது அதிருந்து தெறிக்கும் நீர்த்துளிகள் மற்றும் இறைச்சி கழுவவும் சாப்பிடவும் ஒரே பாத்திரத்தை பயன்படுத்துதல் போன்ற காரணங்களாலும் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1