கொலம்பியாவில் மண்சரிவு - 25 பேர் பலி!

26 ஆனி 2025 வியாழன் 20:19 | பார்வைகள் : 603
கொலம்பியாவின் மலைப் பிரதேசமான பெல்லோவில், கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கி, இதுவரை 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மண்சரிவில் மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டுமானங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
இந்த அனர்த்தம் குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மண்சரிவில் மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களில், 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மண்ணுக்குள் புதைந்து பலர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1