அணு ஆயுதங்களை மேம்படுத்த முயற்சியில் பாகிஸ்தான்

26 ஆனி 2025 வியாழன் 21:19 | பார்வைகள் : 799
பாகிஸ்தான் மீது, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் இந்தியாவின் மத்திய அரசு சமீபத்தில் நடவடிக்கையை எடுத்தது.
இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல், நான்கு நாட்களில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, தன் ஆயுத பலத்தை அதிகரிக்க பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியள்ளது.
அதன்படி, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தன் அணு ஆயுதங்களை மேம்படுத்த முயற்சித்து வருகிறது.
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பை விரைவுபடுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஏவுகணை தயாரானால் பாகிஸ்தானை அணு ஆயுத எதிரியாக அமெரிக்கா கருதும். ஏனென்றால் இந்த ஏவுகணை 5,000 கி.மீ., தூரம் வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1