மகிழுந்துக்குள் வைத்து பூட்டப்பட்ட குழந்தை - மூச்சுத்திணறி பலி!

27 ஆனி 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 1973
மகிழுந்துக்குள் வைத்து பூட்டப்பட்ட இரண்டு வயது குழந்தை ஒன்று மூச்சுத்திணறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bouches-de-Rhône மாவட்டத்தில் உள்ள விமானத்தளம் ஒன்றின் அருகே உள்ள தரிப்பிடத்தில் இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மாலை 4 மணி அளவில் குழந்தை மகிழுந்துக்குள் இருப்பதை கண்டறிந்த சிலர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்துவந்த தீயணைப்பு படையினர் மகிழுந்தின் கண்ணாடிகளை உடைத்து, குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தை உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
36°C வெப்பம் வெளியே நிலவியதாகவும், குழந்தை மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1