Paristamil Navigation Paristamil advert login

ஈரான் தலைவர் கமேனியை கொலை செய்ய திட்டம்..?

ஈரான் தலைவர்  கமேனியை கொலை செய்ய திட்டம்..?

27 ஆனி 2025 வெள்ளி 16:58 | பார்வைகள் : 1900


ஈரான் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை(Ali Khamenei) கொலை செய்ய திட்டமிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் 
இஸ்ரேலின் 'சேனல் 13' தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"நாங்கள் காமேனியை ஒழிக்க விரும்பினோம். ஆனால் எங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காமேனி, மிகவும் ஆழமான நிலத்தடிக்குச் சென்றார்.

ஆரம்பகட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதிகளுக்கு பதில் புதிதாக வந்தவர்களுடனும் தொடர்புகளை அவர் துண்டித்துவிட்டார்.

மேலும் கமேனியை கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை.

கமேனியை கொல்லும் யோசனையை அமெரிக்கா வீட்டோ செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை போலியானவை.

கூடுதலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றால் மீண்டும் தாக்குவோம்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதன் அணுசக்தி நிலையங்களை மீண்டும் புதுப்பிக்கும் நிலையில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என பரபரப்பான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்