Paristamil Navigation Paristamil advert login

ஓட்ஸில் அடங்கியுள்ள ஊட்டசத்துகளும் பயன்களும் என்ன...?

ஓட்ஸில் அடங்கியுள்ள ஊட்டசத்துகளும் பயன்களும் என்ன...?

12 புரட்டாசி 2022 திங்கள் 18:14 | பார்வைகள் : 3098


 ஓட்ஸில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், விட்டமின் பி6, பி1, பி2, இரும்பு, புரதம், நார் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

 
ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்சத்து உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
 
கெட்ட கொழுப்பு கரைக்கப்படுவதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு  தடுக்கப்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மலச்சிக்கல் உண்டாவது தடுக்கப்படுகிறது, மேலும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
 
உடல் எடை குறைப்பதற்கு சிறப்பான, ஒரு உணவு ஓட்ஸ். ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது. தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். ஓட்ஸ் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.
 
ரத்த அழுத்தம் சராசரி நிலையை விட அதிகமாக இருப்பவர்களுக்கு ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மனஅழுத்தம் உண்டாகிறது. ஓட்ஸ் உணவில் இந்த மன அழுத்த நிலையை குறைப்பதற்கான வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்