ஆபத்தானதாக மாறிய Maison Blanche மெட்ரோ நிலையத்தில் தொங்கிய கலைநிலையம் அகற்றப்பட்டது!
27 ஆனி 2025 வெள்ளி 22:57 | பார்வைகள் : 3255
பரிஸ் 13இல், Maison Blanche மெட்ரோ நிலையத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட "The River Of Air" என்ற கலைநிலையம் சமீபத்தில் அகற்றப்பட்டுள்ளது.
70 மீட்டர் நீளமுடைய இந்தக் கலைப்பணி அமெரிக்கக் கலைஞர் நெட் கான் (Ned Kahn) ஆல் உருவாக்கப்பட்டதாகும். காற்றின் தாக்கத்தில் அலுமினிய இலைகள் நகர்ந்து நீல நிற அலைப்போல காட்சியளித்தது. ஆனால் புயல் தாக்கம் காரணமாக சில இலைகள் விழுந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அது தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.
கலைநிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அலுமினிய இலைகளின் லேசர் வெட்டும் முறையில் ஏற்பட்ட குறைபாடுகள் அதன் பலத்தை பாதித்துள்ளன என ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளது.
நிறுவனம் இந்த இலைகளை புதுப்பித்து, ஆண்டிறுதிக்குள் மீண்டும் நிறுவ திட்டமிட்டுள்ளது. 13வது வட்டாரத்தில் வசிப்பவர்கள் இதில் ஏமாற்றம் தெரிவித்தாலும், மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கலைவடிவம் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan