ஆடையை முயற்சிக்க Google வெளியிட்ட புதிய AI செயலி Doppl
28 ஆனி 2025 சனி 10:53 | பார்வைகள் : 4365
Google, ஆடைகளை தனிப்பட்ட முறையில் வித்தியாசமான வகையில் பரிசோதிக்க புதிய AI செயலியான Doppl-ஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது iOS மற்றும் Android பயனர்களுக்கான ஒரு பயனரின் 3D உருவத்தை உருவாக்கி, அந்த உருவத்தில் ஆடைகளை முயற்சிக்க உதவுகிறது.
பயனர் ஒரு புகைப்படத்தை செயலியில் பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு, இணையதளங்களில் உள்ள ஆடைகள், நண்பர்களின் போட்டோ, சமூக ஊடக புகைப்படங்கள் போன்றவற்றை தேர்வு செய்து அந்த ஆடைகளை தாங்கள் அணிந்தால் எப்படி தோன்றும் என்பதை AI மூலம் உருவாக்கப்பட்ட படம் மற்றும் வீடியோவாக காணலாம்.
இந்த செயலி Google Shopping-ன் முந்தைய virtual try-on தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் Doppl, பயன்படுத்தும் நபரின் உருவத்தை வைத்து அதிகம் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.
Google Labs-ன் முயற்சியாக இது இப்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. உடை அணிவதற்கான பொருத்தம் மற்றும் விவரங்கள் சில நேரங்களில் தவறாக இருக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் அம்சங்கள்:
விருப்பமான ஆடைகளை சேமிக்கலாம்
முன்னர் முயற்சித்தவை அனைத்தையும் மீண்டும் பார்க்கலாம்
நண்பர்களுடன் பகிர முடியும்
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan