கர்ப்பிணி போல நடித்து ஓய்வுபெற்றவர்களை ஏமாற்றிய கும்பல் கைது!!
28 ஆனி 2025 சனி 14:19 | பார்வைகள் : 1756
பரிஸ் நகரின் 12ஆம் மற்றும் 14ஆம் வட்டாரங்களில், ஏப்ரல் 9ம் தேதி, 35 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெண்களும் மற்றும் 34 வயதுடைய ஓர் ஆணும், 85 மற்றும் 90 வயதுடைய ஓய்வுபெற்றவர்களை ஏமாற்றி வீட்டிற்குள் நுழைந்து திருடியதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
இதில், ஒரு பெண் கர்ப்பிணி போல நடித்து திடீரென மயக்கமடைந்தது போல நடித்துள்ளார். உதவி செய்ய விரும்பிய மூதாட்டிகள் கதவைத் திறந்ததும், மற்றொரு பெண் வீட்டிற்குள் நுழைந்து மதிப்புள்ள பொருட்களை திருடிவிட்டு, காரில் காத்திருந்த அவர்களது கூட்டாளியுடன் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்களைப் பற்றி புகார் பெறப்பட்டதையடுத்து, காவல்துறையினர் வீடியோக் காட்சிகள் மற்றும் தொலைபேசி தடயங்களை வைத்து மூவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொண்டி (Bondy) மற்றும் வொஜூர் (Vaujours) பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து சில திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே காவல் துறை வேடத்தில் வீட்டிற்குள் நுழைந்து மதிப்புள்ள பொருட்களை திருடும் கூட்டு மோசடிகளும், "தண்ணீர் கணக்கு எஜென்ட்" போல வரும் மோசடிகளும் இதுபோன்று அறியபட்டவையே.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan