Paristamil Navigation Paristamil advert login

தினமும் தோப்புக்கரணம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

தினமும் தோப்புக்கரணம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

3 புரட்டாசி 2022 சனி 05:14 | பார்வைகள் : 3975


 முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும். இடது கையால் வலது காது மடலையும்,வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும். கட்டை விரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்க வேண்டும்.

 
வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும். தலையை நேராக வைத்து மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும். இந்த தோப்புகரணம் போடும்போது வலது கை, இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் சற்று இறுக்கமாக அழுத்தி பிடித்து முழுமையாக உட்கார்ந்து எழந்துக்கொள்ள வேண்டும். சுமார் 10 நெடிகள் உட்கார்ந்து எழந்துக்கொள்ள வேண்டும்.
 
பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே அப்படியே எழுந்து நிற்கவேண்டும். இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும். முதல் முறையாக செய்பவர்கள் எந்த அளவு சிரமம் இல்லாமல் உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார்ந்தால்  போதும்.ஆரம்பத்தில் 5 வரை செய்து, பிறகு அதிக படுத்தி கொள்ளலாம்.
 
நன்மைகள்: இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன. இப்பயிற்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மாற்றங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
 
ஆட்டிசத்தை  சரி செய்ய இது மிகவும் உதவுகின்றது. ஏனைய மன இறுக்கம் சம்மந்தப்பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிப்பது மட்டுமல்லாது அறிவு கூர்மையையும் வெளிபடுத்துகிறது.
 
தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது.விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கிறது. இதற்காகத்தான் மந்தபுத்தியுள்ள பிள்ளைகளை, அறிவாற்றல் மிக்கவர்களாக ஆக்குவதற்காகவே, தோப்புக்கரணம் போடப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்