பொதுகடனை அடைக்க €40,000 வரை அரசுக்கே நன்கொடை வழங்கும் பிரஞ்சு குடிமக்கள்!!

28 ஆனி 2025 சனி 22:57 | பார்வைகள் : 2278
2006 முதல் பிரான்ஸ் குடிமக்கள் அரசுக்கே நேரடியாக நன்கொடை வழங்கும் உரிமையை பெற்றுள்ளனர்.
இந்த சட்டத்தின் படி, "அரசுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் வளங்களானவை, உரிய அதிகாரிகளால், அரசுத் தீர்மானத்தின் மூலம் ஏற்கப்படும்" என உள்ளது. இந்த ஒப்புதலின் முக்கியமான அம்சமானது, அந்த நன்கொடையை ஏற்றதற்கான தீர்மானத்தை அதிகாரப்பூர்வ அரசியல் பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்பதுதான்.
ஒரு பிரஞ்சு குடிமகன் தற்போது 45 யூரோக்கள் காசோலையை நன்கொடையாக பொருளாதார அமைச்சுக்கு செலுத்தியுள்ளார். இது அரசுக்கு பொதுக்கடனை அடைக்க உதவுவதற்காக எடுத்த நடவடிக்கையாகும்.
அரசுத் தீர்மானம் வழியாக இந்த நன்கொடை அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது, ஆனால் இதற்காக எந்தவொரு வரிவிலக்கும் அளிக்கப்படவில்லை. இதேபோல் 2021-ல் Michel Fache என்பவர் 40,000 யூரோக்கள் வரை நன்கொடை வழங்கியதையும் அரசு ஏற்றுக்கொண்டது.
பொதுக்கடன் தற்போது 3,300 பில்லியனை யூரோக்களை தாண்டியுள்ள நிலையில், சில குடிமக்கள் தங்களால் இயன்ற அளவில் பங்களிக்க முன்வருகிறார்கள். இது அபூர்வமானது என்றாலும், சட்டப்படி முழுமையாக அனுமதிக்கப்பட்ட செயலாகும்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1