Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் மற்றும் புறநகரங்களில் கடுமையான வெப்பம்! - செம்மஞ்சள் எச்சரிக்கை!!

பரிஸ் மற்றும் புறநகரங்களில் கடுமையான வெப்பம்! - செம்மஞ்சள் எச்சரிக்கை!!

29 ஆனி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 627


 

இன்று நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைநகர் பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும்  36°C வரையான வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் வெப்பம் காரணமாக ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பம் அடுத்துவரும் கிழமை நாட்களிலும் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை திங்கட்கிழமை  36°C வெப்பமும், மறுநாள் செவ்வாய்க்கிழமை மிகவும் உக்கிரமாக  39°C வரை வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்