Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!!

Aulnay-sous-Bois : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!!

29 ஆனி 2025 ஞாயிறு 16:07 | பார்வைகள் : 1001


Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 rue de Lisbonne வீதியில் வைத்து இத்துப்பாக்கிச்சூட்டு நள்ளிரவு 1 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பலர் சரமாரியான துப்பாக்கி முழக்கம் கேட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு நபர் ஒருவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்