கடுமையான வெப்பம்: நிறுவனங்களின் பொறுப்புகளை நினைவூட்டும் வேலைத்துறை அமைச்சர்!
30 ஆனி 2025 திங்கள் 06:00 | பார்வைகள் : 3769
பிரான்ஸ் முழுவதும் தற்போது கடுமையான வெப்ப அலை தாக்கியுள்ள நிலையில், தொழிற்துறை அமைச்சர் கதிரின் வோட்ரான் (Catherine Vautrin) நிறுவனங்களின் கடமைங்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளார்.
புதிய அரசாணை செவ்வாயன்று அமலுக்கு வருகிறது
மே 27, 2025 அன்று வெளியான அரசாணை, அதிக வெப்பம் தொடர்பான புதிய பாதுகாப்பு விதிகளை தொழிலாளர்களுக்காக உழைப்புச் சட்டத்தில் இணைத்துள்ளது.
இது தேசிய வானிலை அவதானிப்பு யைத்திலிருந்து பெறப்படும் மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்யும் விதிகளை வகுக்கிறது.
முக்கிய வழிகாட்டுதல்கள்:
வேலை நேர ஒழுங்கமைப்பில் மாற்றம்
அதிக வெப்பம் பதிவாகும் நேரங்களில் (பகல் 12 மணி போன்றது), வேலையை தற்காலிகமாக வேலையை நிறுத்துதல்.
கடினமான உடல் வேலை நேரங்களை மாற்றுதல்.
வேலை இடங்களை மாற்றுவதும் அவசியம்
வெப்பம் மற்றும் சூரிய கதிர் தாக்கங்களை குறைக்கும் வகையில்
காற்றோட்டம், தண்ணீர் தெளிப்பு வசதி, மூடி வைக்கும் உபகரணங்கள் போன்றவற்றைப் பொருத்த வேண்டும்.
குளிர்ந்த குடிநீர் வழங்கல் வேண்டும்
குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.
இது தவிர, சூழ்நிலைக்கேற்ப வேலை உடைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட வேண்டும்.
என வலியுறுத்தி உள்ளார்.
கடந்த வருடம் (2024), வெப்பம் அதிகமாக இருந்தது. இதன் பாதிப்பாக, 7 தொழிலாளர்களின் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்கள் பெரும்பாலானவர்கள் மனைப்பணிகள், கட்டுமானம், விவசாயம் போன்ற வெளிவேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இறந்தவர்களின் வயதெல்லைகள் 39 முதல் 71 வரையாக இருந்தன.
"மத்தியானம், கூரையில் 40°ஊ வெப்பத்தில் ஒரு ஊழியரை வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது,"
'
"நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை முன்னிறுத்துவது நிறுவனத்தின் நேரடி கடமை" என கதிரின் வோத்ரான் நிறுவனங்களை எச்சரித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan