இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 ஆனி 2025 திங்கள் 07:15 | பார்வைகள் : 1581
இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
சமீப காலமாக, இந்தியாவுடனான பணிகளில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அதிபர் டிரம்ப் பலமுறை சூசகமாக குறிப்பிட்டு பேசி வருகிறார். சமீபத்தில், ''இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம். தற்போது சீனாவில் இருந்து ஒப்பந்தத்தை தொடங்கியுள்ளோம்.
நாங்கள் அனைத்து நாடுகளிடமும் ஒப்பந்தம் செய்ய மாட்டோம். சிலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவோம்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக, வர்த்தகத் துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக்குழு வாஷிங்டனுக்கு சென்றுள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
''உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான டிரம்ப்பின் காலக்கெடு ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைவதால், இந்த ஒப்பந்தம் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது'' என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan