Paristamil Navigation Paristamil advert login

வெப்பம் : இல் து பிரான்சுக்குள் வேகக்கட்டுப்பாடு!!

வெப்பம் : இல் து பிரான்சுக்குள் வேகக்கட்டுப்பாடு!!

30 ஆனி 2025 திங்கள் 09:07 | பார்வைகள் : 1722


 

அதிக வெப்பம் காரணமாக இன்று ஜூன் 30, திங்கட்கிழமை இல் து பிரான்சின் அனைத்து வீதிகளுக்கும் வேகக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதியில் அதிகபட்ச வேகத்தில் இருந்து 20 கி.மீ வேகம் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 130 கி.மீ வேகம் கொண்ட வீதிகள் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும். இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 3.5 தொன் எடைக்கும் அதிகமான வாகனங்கள் பரிசில் சுற்றுவட்ட வீதியை கடந்து செல்லவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

180 தொடக்கம் 200 மைக்ரோகிராம்/கியூபிக் மீற்றர் (180 and 210 μg/m³) அளவுக்குள் மாசடைவைக் கட்டுப்படுத்துப்படுத்தும் நோக்கில் இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்