புலம்பெயர்ந்தோர் படகு கடத்தல்காரர்களுக்கு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை!!
30 ஆனி 2025 திங்கள் 13:59 | பார்வைகள் : 1563
2022 ஆம் ஆண்டு டிசம்பரில் pas de calais கடலில் புலம்பெயர்ந்தோர் படகுப் போக்குவரத்துடன் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது குர்திஷ் கடத்தல்காரர்களும் மற்றும் ஆப்கானியர்களும், ஜூன் 16 முதல் 20 வரை லில்லில் நடபெற்ற நீதிமன்ற தீர்ப்பில் கடுமையான சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு நீதிமன்றத்தில் 7 முதல் 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 யூரோக்கள் முதல் 100,000 யூரோக்கள் வரை அபராதமும், பிரான்சில் தங்குவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மனிதக்கடத்தல், தவறான முறையில் உயிரிழப்புக்கு காரணம், மற்றும் சட்டவிரோதமாக குடியேற்றத்தை ஆதரித்தல் போன்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து, கடந்த சில ஆண்டுகளில் pas de calais கடலில் நிகழ்ந்த மிகப்பெரிய மரணங்களை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்றாகும். பாதிக்கப்பட்ட படகு அதிகம் கூட்டமுள்ள நிலையிலும், கடல் நிலை மோசமாக இருந்த போதிலும் கடலுக்கு புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வழக்கின் போது, ஒருவர் தன்னை அச்சுறுத்தி புலம்பெயர்ந்தவர்களை கொண்டு செல்ல வைத்ததாக தெரிவித்துள்ளார். இரு ஆப்கானியர்கள் நிதியுதவி செய்தவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். படகு ஓட்டிய சிறுவன் இங்கிலாந்தில் 9 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளான், மேலும் ஒரு சந்தேகநபர் பெல்ஜியத்தில் கைதாகியுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan