Paristamil Navigation Paristamil advert login

வெப்பம் : ஈஃபிள் கோபுரம்.. 1,350 பாடசாலைகள் , போக்குவரத்துக்கள் பாதிப்பு!!

வெப்பம் : ஈஃபிள் கோபுரம்.. 1,350 பாடசாலைகள் , போக்குவரத்துக்கள் பாதிப்பு!!

1 ஆடி 2025 செவ்வாய் 06:30 | பார்வைகள் : 1155


பாடசாலைகள்!

அதிக வெப்பம் காரணமாக பிரான்சில் உள்ள 1,350 பாடசாலைகள் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

முழுமையாகவோ/பகுதி நேரமாகவோ பாடசாலைகள் மூடப்பட்டுகிறது. நேற்று திங்கட்கிழமை ஜூன் 30 ஆம் திகதி 750 பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக இது தொடர்கிறது. அதேவேளை இந்த அதிக வெப்பம் நாளை புதன்கிழமையும் தொடரும் என்பதால், நாளையும் பல பாடசாலைகள் மூடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 ஈஃபிள்!

அதேவேளை, ஈஃபிள் கோபுரத்தின் உச்சிக்குச் செல்வது தடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது - இரண்டாவது தளங்கள் மட்டுமே திறந்திருக்கும் எனவும், நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியுடன் மூடப்பட்ட இந்த மூன்றாவது தளம், இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து!

மேலும், நேற்று திங்கட்கிழமை நடைமுறையில் இருந்த வேகக்கட்டுப்பாடு இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சின் வீதிகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 20 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 130 கி.மீ வேகம் உள்ள சாலைகளில் 110 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.

3.5 தொன் எடைக்கும் அதிகமாக உள்ள வாகனங்கள் சுற்றுவட்ட வீதியின் பைபாஸ் வழியினை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்