Paristamil Navigation Paristamil advert login

தொடர் அதிகரிப்பில் கைதிகளின் எண்ணிக்கை! - நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்!!

தொடர் அதிகரிப்பில் கைதிகளின் எண்ணிக்கை! - நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்!!

1 ஆடி 2025 செவ்வாய் 11:15 | பார்வைகள் : 699


பிரான்சில் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஜூன் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின் படி பிரான்சில் 84,447 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது பிரெஞ்சு சிறைச்சாலைகளில் உள்ள எண்ணிக்கையை விட 136% சதவீதமாகும்.

இந்த எண்ணிக்கை கடந்த 2024 ஆம் அண்டு ஜூன் 1 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் 6,567 பேரால் அதிகமாகும். இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் 81,599 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். பிரெஞ்சு அரசு அவசர அவசரமாக மூன்று சிறைச்சாலைகளை நிர்மானிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளை வாடகைக்கு பெறும் முயற்சியினையும் மேற்கொண்டு வருகிறது. 

பிரான்சில் 62,566 கைதிகள் சிறைவைக்கக்கூடிய சிறைச்சாலைகள் மட்டுமே உள்ளன. சில சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட 250% சதவீதமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரே அறைக்குள் மூன்று அல்லது நான்கு வரையான கைதிகள் அடைக்கப்பட்டும், கட்டில்கள் இல்லாமல் மெத்தையை தரையில் விரித்து உறங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்