Paristamil Navigation Paristamil advert login

அல்ப்ஸில் கடும் வெள்ளம்: பரிஸ்-மிலான் ரயில் சேவை இடைநிறுத்தம்!!

அல்ப்ஸில் கடும் வெள்ளம்: பரிஸ்-மிலான் ரயில் சேவை இடைநிறுத்தம்!!

1 ஆடி 2025 செவ்வாய் 13:46 | பார்வைகள் : 521


அல்ப்ஸ் (les Alpes )பகுதியில்ர திங்களன்று ஏற்பட்ட கடும் இடியுடன் கூடிய மழையால் சாவோயின் மொடான் (Modane-Savoie) மற்றும் பூர்னோ (Fourneaux) பகுதியில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

ஷார்மை (Charmaix) நீரோடை கரைமீறி வீதிகளை வெள்ளம் மூடியுள்ளது. ரயில் பாதைகள் களிமண்ணால் மூடப்பட்டதால், பரிஸ் - மிலான் இடையிலான ரயில் சேவை பல நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் உயிரிழப்பு எதுவும் இல்லை, ஆனால் இத்தாலியில் 70 வயதுடைய ஆண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மொடான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சாலைகள் மூடப்பட்டு, வீடுகள் மற்றும் பாடசாலை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 15 பேர் பாதுகாப்பாக நகர மண்டபத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

ஹோட் அல்ப்ஸ் பகுதியில் துரான்ஸ் (la Durance) ஆறு கரைமீறி வீடுகள் மற்றும் முகாம்கள் மூழ்கியுள்ளன. த்ரோம் (la Drôme) மற்றும் ஆர்டெஷ் (l'Ardèche) பகுதிகளில் கடும் மழையால் 5,000 வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்