Paristamil Navigation Paristamil advert login

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

16 ஆடி 2022 சனி 10:04 | பார்வைகள் : 10397


 பிஸ்தாவில் வைட்டமின் பி6 உள்ளது. ஆகவே பிஸ்தாவை சாப்பிடுவதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது. இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது.

 
பிஸ்தாவில் வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்திருப்பதால், பிஸ்தா சருமத்திற்கு மிகச் சிறந்தவை. பிஸ்தா சருமத்தை சுருக்கங்களிலிருந்து தடுக்கிறது.
 
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதிலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்துவதிலும் பிஸ்தா நன்மை பயக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மேலும், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் நல்ல கொழுப்புகள் அவற்றில் உள்ளன.
 
பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது, மற்றும் குடலில் நல்ல பாக்டீரியா வளர்வதற்கு உதவி செய்கிறது. குடலில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட கொழுப்பு அமிலங்களை  உற்பத்தி செய்கிறது.
 
பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கிறது.
 
பிஸ்தாவை உட்கொள்வது ஆண்களில் கருவுறுதல் மற்றும் பாலியல் உந்துதலை அதிகரிக்கும். பிஸ்டாவில் அர்ஜினைன், பைட்டோஸ்டெரால் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற கூறுகள் உள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்