பாகிஸ்தானில் கன மழை - 18 பேர் உயிரிழப்பு!

1 ஆடி 2025 செவ்வாய் 17:55 | பார்வைகள் : 174
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 11 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் 57 பேர் காயமடைந்தனர்.
இதனை அந்நாட்டு மாகாண அனர்த்த முகாமைத்துவ கழகம், இன்று (01) வெளியிட்ட அறிக்கை ஊடாக தெரிவிக்கின்றது.
இதேவேளை, பழைய கட்டிடங்கள் மற்றும் அவற்றின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அதுபற்றி இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.