செம்மணி புதைகுழியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இறப்பர் பொம்மை

2 ஆடி 2025 புதன் 11:27 | பார்வைகள் : 293
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இறப்பர் பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். அரியலை் சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் சிறு பிள்ளையின் எலும்புக்கூடு வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புத்தகப் பை அருகே கிடந்த பொம்மை மற்றும் , சிறு பாதணி என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விடயமானது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதியில் இதுவரையில் 30க்கும் மேற்பட்ட எலும்புகூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்குவதாக அகழ்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.