500க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் - பாபா வங்கா கணித்த நாள் நெருங்குவதால் அச்சம்

2 ஆடி 2025 புதன் 11:27 | பார்வைகள் : 507
பாபா வங்காவின் பேரழிவு கணிப்பு நாள் நெருங்கும் நிலையில், ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற பெண் 'புதிய பாபா வங்கா' என அழைக்கப்படுகிறார்.
மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோபு பூகம்பம், பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற நிகழ்வுகளை முன்னதாகவே இவர் கணித்திருந்தார்.
இவர் எழுதியுள்ள புத்தகத்தில், 2025 ஜூலை 5 ஆம் திகதி ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பெரியளவிலான சுனாமி ஏற்படும்.
இந்த சுனாமியானது, 2011 ஆம் ஆண்டு ஏற்பட்டதை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜப்பானுக்கு வர திட்டமிட்டுருந்த சுற்றுலா பயணிகள், 50 சதவீதம் பேர் தங்களது முன்பதிவை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தென்மேற்கு ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள ஒரு தொலைதூர தீவு சங்கிலியில் சனிக்கிழமை முதல் கிட்டத்தட்ட 500 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இதில் எந்த சேதாரமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டோகாரா தீவுகளில் புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பாபா வங்கா கணிப்பிற்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.