Paristamil Navigation Paristamil advert login

எட்டு வடிவ நடை பயிற்சியை செய்வதால் இத்தனை பயன்களா...!!

எட்டு வடிவ நடை பயிற்சியை செய்வதால் இத்தனை பயன்களா...!!

4 ஆடி 2022 திங்கள் 14:35 | பார்வைகள் : 9364


 எட்டு நடைப்பயிற்சியின் போது எந்த வகையான காலணிகளும் இல்லாமல் வெறும் கால்களில் இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதே முழுமையான பலன்களை கொடுக்கும்.

 
கால்களில் காயம் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் காலணி, ஷூ போன்றவற்றை அணிந்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
 
8 வடிவ நடைப்பயிற்சி எப்போதுமே வடக்கு, தெற்கு திசைகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடை பயிற்சியை செய்ய வேண்டும். பிறகு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி எட்டு வடிவில் 15 நிமிட நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதற்கு மொத்தம் 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும்.
 
உடல் வலி, தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், மலச்சிக்கல், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் முழங்கால் வலி, போன்ற பல நோய்கள், பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்கள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட சில காலத்திலேயே அவை அனைத்தும் நீங்குவதை அனுபவபூர்வமாக உணரலாம். மேலும் 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும்.
 
முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமையான தோற்றத்தையும், இளைய வயதினரை போன்ற மன உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்ளலாம். 8
 
வடிவ நடைப்பயிற்சி மனிதர்களின் கண்களின் பார்வை திறனை மேம்படுத்தும். 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கண்பார்வை மங்குதல், கண் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அறவே நீங்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்