26,000 அடி உயரத்தில் இருந்து திடீரென சரிந்த விமானம் - கதறி அழுத பயணிகள்

2 ஆடி 2025 புதன் 18:52 | பார்வைகள் : 687
ஜப்பான் தலைநகர் டோக்கியாவை நோக்கி, 26,000 அடி உயரத்தில் இருந்து பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென சரிந்ததால் பயணிகள் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.
ஜப்பான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங்737 விமானம் ஒன்று கடந்த ஜூன் 30 ஆம் திகதி, சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
இதில், விமான பணியாளர்கள் உட்பட 191 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியாவை நோக்கி, 26,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானம், திடீரென கீழே சரிய தொடங்கியுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 10 நிமிடங்களில் 36,000 அடியிலிருந்து 10,500 அடிக்குக் விரைவாகக் கீழே இறங்கியுள்ளது.
கேபினில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, பயணிகள் உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இதில், தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் பலரும் அதிர்ச்சியில் கண் விழித்தனர்.
விமானத்தை தரையில் மோதி விபத்தை சந்திக்க போகிறது என பயந்த பயணிகள் பலரும், உடனடியாக தங்கள் குடும்பத்தினருக்கு உயில், வங்கி கடவுச்சொல் மற்றும் காப்பீட்டுத் தகவல்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களுடன் இறுதித்தகவலை அனுப்ப தொடங்கியுள்ளனர்.
மேலும், விமானிகள் உடனடியாக அவசரநிலையை அறிவித்து, ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.
இதில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு, இரவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து இழப்பீடாக, 15,000 யென் (இந்திய மதிப்பில் ரூ.8,945) வழங்கப்பட்டது.
விமானத்தில் இருந்து வெளியே வந்த பயணிகள் பலரும், கண்ணீர் மல்க தங்களது பயண அனுபவம் குறித்து பேசினர்.
சமீபத்தில், அகமதாபாத்தில் போயிங் ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று, விபத்தை சந்தித்தில், 274 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மற்றொரு போயிங் விமானத்தில் நடந்துள்ள சம்பவம் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.