Paristamil Navigation Paristamil advert login

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அதிரடி ?

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அதிரடி ?

2 ஆடி 2025 புதன் 18:46 | பார்வைகள் : 183


சிம்பு நடிக்க தான் இயக்க உள்ள புதிய படம் பற்றிய சில குழப்பங்களுக்கான பதிலாக சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார் வெற்றிமாறன். அந்த வீடியோவைப் பார்த்து பலருக்கும் பல கேள்விகள் எழுந்தது.

இருந்தாலும் 'வட சென்னை' படத்தின் முன்பகுதியாக அந்தப் படம் இருந்தாலும் அதற்காக எந்த ஒரு தடையும் சொல்ல மாட்டேன் என தனுஷ் உறுதியாக சொல்லிவிட்டதாக வெற்றிமாறன் பேசியிருந்தார்.

இதனால், தற்போது அமீரின் இளமைப் பருவத்தைப் பற்றிய 'ராஜன் வகையறா' கதையாகத்தான் அந்தப் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என சிம்பு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

அதனால், அவருக்கு சில கெட்டப்புகளில் நடிக்க வைக்க வெற்றிமாறன் தயாராகிவிட்டாராம். அதற்கான முன்னோட்ட வீடியோ வெளியிடுவதற்கான படப்பிடிப்பு முன்னதே முடிந்து விட்டாலும் மற்றொரு தோற்றத்திற்கான வீடியோ முன்னோட்டத்தை ஆரம்பித்துள்ளார்களாம். சீக்கிரத்திலேயே மாறுபட்ட முன்னோட்டம் ஒன்றை ரசிகர்களுக்குக் காட்டத் தயாராகி வருகிறார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்.

வர்த்தக‌ விளம்பரங்கள்