ICC தரவரிசை வெளியீடு: டி20 தரவரிசையில் முதல் இடம் பிடித்த இளம் இந்திய வீரர்?

1 ஆவணி 2025 வெள்ளி 07:45 | பார்வைகள் : 707
இளம் இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா டி20 வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளதை தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தனது 24-வது வயதில் அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை பின்னுக்குத்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் அபிஷேக் ஷர்மா.
தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டியின் போது இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை பின்னுக்குத்தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் சமீபத்திய டி20 தொடரில் அவர் பங்கேற்காததால், அபிஷேக் ஷர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது, மற்றொரு நம்பிக்கைக்குரிய இந்திய வீரரான திலக் வர்மா மூன்றாம் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் ஆறாம் இடத்திலும் உள்ளனர்.
முன்னதாக, 2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் முதலிடத்தில் இருந்த விராட் கோலிதான் இந்த நிலையை எட்டிய முதல் இந்திய வீரர் ஆவார்.