Paristamil Navigation Paristamil advert login

வீதிகளுக்கு ‘கறுப்பு’ எச்சரிக்கை!!

வீதிகளுக்கு ‘கறுப்பு’ எச்சரிக்கை!!

1 ஆவணி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1599


 

கோடைகால விடுமுறையினால் வார இறுதி நாட்களில் வீதிகள் பலத்த நெரிசலை சந்தித்து வருகிறது. இந்த வார இறுதி முன்னர் இல்லாத அளவு மிகவும் நெருக்கடியாக இருக்கும் எனவும், அதிகபட்ச எச்சரிக்கையான ‘கறுப்பு’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஓகஸ்ட் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை A11, A10, A63 ஆகிய நெஞ்சாலைகளுக்கும் A9, A50 மற்றும் A8 ஆகிய நெடுஞ்சாலைகளுக்கும், A7, A43 மற்றும் A71, A75 ஆகிய நெடுஞ்சாலைகளின் வெளிச்செல்லும் (départs) வீதிகளில் அதிக நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு நாட்டின் வடக்கு, கிழக்கின் சில பகுதிகள், மேற்கு, வடமேற்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாளை ஓகஸ்ட் 2 ஆம் திகதி சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து சாலைகளுக்கும் சேர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் “கறுப்பு” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்வரும் வீதிகளுக்கு (Retours) செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்