Paristamil Navigation Paristamil advert login

மாதவிடாய் வலி உங்களை வாட்டுகிறதா?

மாதவிடாய் வலி உங்களை வாட்டுகிறதா?

7 ஐப்பசி 2021 வியாழன் 11:54 | பார்வைகள் : 9435


 மாதவிடாய் காலத்தில் பல பெண்களும் எதிர்கொள்ளும் பெரிய சிக்கல், மிதமானது முதல் தீவிரமான வலி. மாதவிடாயின் போது ஏற்படும் வலியைப் போக்க வழியே இல்லையா என்ற பல பெண்களின் கேள்விக்கான பதில், உடற்பயிற்சி செய்வது ஆகும். க்ராம்ப்ஸ் எனப்படும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியது. 

 
கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் இந்த வலி ஏற்படுகிறது என்று அறிவியல் பூர்வமாக வலிக்கான காரணம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்ப்பப்பையின் லைனிங் சுருங்கி, உடலை விட்டு வெளியே வருகிறது. இது பெண்ணுறுப்பு வழியே உதிரம் வெளியேறுவதற்கு உதவியாக இருக்கிறது. அடிவயிற்றில் பெரும்பாலான பெண்களுக்கு லேசான வலி ஏற்படும்.
 
ஒரு சிலர் இதனை எளிதாக எதிர்கொண்டாலும், பல பெண்களுக்கு அதிகமான வலி ஏற்படுவது, மாதவிடாய் காலத்தை சிரமமானதாக்குகிறது. வலி மாத்திரை, உணவுகள் மற்றும் ஓய்வு என்று மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக வலியை எதிர்கொள்கின்றனர். இக்காலத்தில் ஏற்படும் வலியை குறைக்க மற்றும் சுலபமாக எதிர்கொள்ள, ஆரோக்கியமான முறைகள் உள்ளன. உடற்பயிற்சி செய்தவே இதற்கான சிறந்த வழியாகும். ஆரோக்கியமான மற்றும் சுலபமான முறையில் மாதவிடாய் காலத்தில் வலியை குறைப்பதற்கான எளிமையான ஐந்து உடற்பயிற்சிகள் இங்கே.
 
யோகா பயிற்சி: உடல் மட்டுமின்றி, மனதுக்கும் சேர்த்து யோகா பயிற்சி செய்யலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணத்தால், மாதவிடாயின் மனநிலையில் நிமிடத்துக்கொரு முறை மாறுதல் ஏற்படும். இந்நிலையில், யோகா பயிற்சி செய்வது உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுவதோடு, மனதையும் அமைதி படுத்துகிறது. உடல் தசைகள் தளர்வடைந்து, ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வலி பெருமளவு குறையும்.
 
ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள்: உடலில் உதிரப் போக்கு ஏற்படுவதால், மிகவும் சோர்வாக உணர்வீர்கள். நாள் முழுவதும் ஓய்வாக இருக்கலாமா என்று தோன்றும். உடலின் தசைகளை தளர்ததி, வலியை குறைத்து, கொஞ்சம் ஆற்றலை அதிகரிக்க, எளிமையான ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் செய்யலாம்.
 
நடனம்: மாதவிடாயின் போது, நடனமா என்று கேட்கலாம்? நீங்கள் விரும்பும் பாடலுக்கு அல்லது இசைக்கு உங்கள் மனம் விரும்பும் வகையில் நடனம் ஆடுவது, உங்களை ரிலாக்ஸ் செய்ய உதவும். நடனம் மனதை உற்சாகப்படுத்தி, உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
 
நடைபயிற்சி: எந்த விதமான உடற்பயிற்சியாக செய்தாலும், நடைபயிற்சி உட்பட, உடலில் எண்டார்ஃபின்ஸ் என்ற ஹார்மோன் சுரக்க உதவும். இந்த ஹார்மோன் மூளையில் வலியை உணரும் ரிசப்ட்டார்சை நிறுத்தி, உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது. இது, மாதவிடாய் வலியை குறைக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்