Paristamil Navigation Paristamil advert login

மின் எரிவாயுக் கட்டணங்கள் வீழ்ச்சி - சந்தா அதிகரிப்பு!

மின் எரிவாயுக் கட்டணங்கள் வீழ்ச்சி - சந்தா அதிகரிப்பு!

1 ஆவணி 2025 வெள்ளி 11:16 | பார்வைகள் : 549


ஓகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மற்றொரு மாற்றம்: எரிவாயு மற்றும் மின்சார சந்தாக்களுக்கு இருந்த 5.5% குறைக்கப்பட்ட மதிப்புக்கூட்டல் வரி (TVA) நீக்கப்பட்டு, இதற்கு பதிலாக இப்போது அந்த சேவைகளுக்கு கிட்டத்தட்ட வரி  நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டு 20% TVAவிதிக்கப்படும். இது ஒரே சேவைக்கு ஒரே விதமான வரிவிகிதம் இருக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவுக்கு அமைவாக அமைகிறது.

ஆனாலும் எல்லா நாடுகளிலும் ஊதியமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தினை மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் ஏனோ மறந்து விட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அநீதி மக்களைப் பாதிக்காமல் இருக்க கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் 33.70€/MWh-இலிருந்து 29.98€/MWh-ஆக குறைக்கப்படும்.
எரிவாயு:  17.16€/MWh-இலிருந்து 15.43€/MWh-ஆக குறைக்கப்படும்.

இது சக்தி; ஒழுங்குமுறை ஆணையமானCRE இன் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிள்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்